மாவோவின் கையெழுத்து குறிப்புகள் ஏலம்!

யூலை 11, 2017

நவீன சீனாவை நிறுவிய மாவோ சேதுங், தான் கைப்பட எழுதிய குறிப்புகளின் தொகுப்பு லண்டனில் நடைபெற்ற ஒரு ஏலத்தில், அதன் உண்மையான மதிப்பீட்டை விட பத்து மடங்கு அதிகமாக, சுமார் ஒரு மில்லியன் டாலருக்கு ஏலம் போனது.

மாவோவுக்கு வாசிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட ஒரு பேராசிரியருக்கு 1975-ஆம் ஆண்டு அந்த குறிப்புகள் எழுதப்பட்டுள்ளன. அந்த மூத்த தலைவர் என்ன சொல்கிறார் என்பதைப் புரிந்து கொள்வதைக் கடினமாக உணர்ந்த அந்தப் பேராசிரியர், மாவோவின் எண்ணங்களை ஒரு குறிப்பேட்டில் எழுதச் சொன்னார்.

இந்த கையெழுத்துப் பிரதிகள் "மிகவும் அரிதானவை" என்று கூறியுள்ள சோத்பிஸ் ஏல நிறுவனம், அது ஏலத் தொகையில் பிரதிபலிப்பதாகத் தெரிவித்துள்ளது. அந்தத் தொகுப்பு ஒன்பது லட்சத்து பத்தாயிரம் டாலர்களுக்கு ஏலம் போனது.

செய்திகள்