மின்சாரம் இல்லாமல் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி!

Sunday December 30, 2018

மின்சாரம் இல்லாமல், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டி  அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.‘யுமா — 6எல்’ என்ற இந்த குளிர்பதனப் பெட்டி, ஆவி மூலம் குளிர்வித்தல் என்ற அறிவியல் முறைப்படி இயங்குகிறது.

இந்தப் பெட்டியின் நான்கு சுவர்களுக்குள்ளும் உள்ள காலி இடத்தில் தண்ணீரை ஊற்றிவிட்டால், அந்த நீர் வெளி வெப்பத்திற்கு ஆவியாகி வெளியேற ஆரம்பிக்கிறது.இதனால், பெட்டிக்குள் இருக்கும் கொஞ்ச நஞ்ச வெப்பமும் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்படுகிறது. விளைவு? பெட்டிக்குள், 35 டிகிரி பரனைட் வரை குளிர்ச்சி ஏற்படுகிறது.
வழக்கமான மின்சார, ‘பிரிஜ்’களின் உள்ளே ஈரப்பதம் வெகுவாக குறைந்திருக்கும்.

சாதாரண பிரிஜ்களில் தக்காளி, வாழைப்பழம், மிளகாய் போன்றவை சுருங்கி சுவையை இழக்கின்றன.ஆனால், யூமா – 6எல் சாதனத்தில் அது நேர்வதில்லையாம். மின்சாரம் துளியும் இல்லாமல், ஒரு வீட்டுக்குத் தேவையான உணவு காய்கறிகளை குளிர்ச்சியாக வைத்திருக்க இதனால் முடிவதாக கண்டுபிடிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.