மின்சார சபை ஊழியர்கள் ஐவர் வைத்தியசாலையில்!

வியாழன் சனவரி 18, 2018

மின்சார சபை ஊழியர்கள் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மின்சார ​சேவைகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இன்று காலை 9 மணித்தொடக்கம்  நாடு தழுவிய பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளதால் சகல மின்சார சபை ஊழியர்களும் இதில் பங்கெடுக்குமாறும்,மின்சார சபையில் இடம்பெறும் ஊழல், மோசடிகளுக்குத் தீர்வினைப் பெற்றுத் தராமல் பொலிஸார் நடத்திய இந்தத் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது தொழிற்சங்க ஊழியர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலைக் கண்டித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படுவதாக மின்சார ​சேவைகள் சங்கத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.