மியான்மர் எல்லையில் இருந்து வெளியேறிய 1,200 அகதிகள்!

Saturday November 25, 2017

மியான்மர் எல்லையில் இருந்து வெளியேறிய 1,200க்கு மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மிஜோரம் மாநிலத்தில் நேற்று தஞ்சம் அடைந்துள்ளனர். மியான்மர் நாட்டில் ரோஹிங்கியா இனத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். இவர்களை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, அங்கிருந்து ரோஹிங்கியா அகதிகளாக வெளியேறி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். வங்காள தேசத்தில் மட்டும் சுமார் 6 லட்சத்துக்கு மேற்பட்ட அகதிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மியான்மர் நாட்டில் இருந்து 1,200க்கு மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் வெளியேறி மிஜோரம் மாநிலத்தில் தஞ்சம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
 
இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில், மியான்மரில் இருந்து 1,200 அகதிகள் நேற்று மிஜோரம் மாநிலம் வந்தடைந்தனர்.  அவர்களில் புத்த மதம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்களே அதிகம்.

தஞ்சமடைந்த அகதிகள் பள்ளிகள் உள்பட பல்வேறு முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளனர்.