மீண்டும் உயிர் தப்பினார் கோத்தா?

Wednesday November 07, 2018

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ விபத்தொன்றில் உயிர் தப்பியுள்ளார்.கோத்தபாயவும் அவரது மனைவியும் பயணித்த ஜீப் வண்டி, இன்று (07) காலை, இழுவை இயந்திர வண்டியுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இந்நிலையில், இழுவை இயந்திர வண்டியின் சாரதி காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும், இந்த விபத்தில், கோட்டாபய ராஜபக்ஷவுக்கோ அல்லது அவரது மனைவி அனோமா ராஜபக்ஷவுக்கோ, எவ்வித ஆபத்தும் நேரவில்லையென, காவல் துறையினர்  தெரிவித்தனர்.