மீண்டும் நடிக்க வந்த ஜெனிலியா!

செவ்வாய் டிசம்பர் 04, 2018

பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகிய ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.

சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்தவர் ஜெனிலியா. தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த ஜெனிலியா, திடீர் என்று இந்தி நடிகர் ரித்தேன் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

 

6 ஆண்டுகள் நடிப்புக்கு விடுப்பு எடுத்தவர் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். முதலில் கணவர் ரித்தேஷ் நடிக்கும் மவுலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

 

 

தொடர்ந்து ஜோதிகா, சமந்தா போல தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்க இருக்கிறார். திருமணமான நடிகைகளுக்கும்தனி மார்க்கெட் உருவாகி வருவதால் ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்து இருக்கிறார்.