மீண்டும் நடிக்க வரும் சரிதா!

ஞாயிறு ஏப்ரல் 01, 2018

தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்த சரிதா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க  இருக்கிறார். இயக்குநர்  கே.பாலச்சந்தரால் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டவர் சரிதா. ‘தண்ணீர் தண்ணீர்’, ‘அச்சமில்லை அச்சமில்லை’ உள்பட ஏராளமான படங்களில் நடித்தார்.

2013-ம் ஆண்டுக்குப்பிறகு சரிதா நடிக்கவில்லை. தற்போது மகன்களுடன் துபாயில் வசித்து வருகிறார். அடிக்கடி சென்னை வரும் அவர், தனது தங்கை குடும்பத்தை சந்தித்துவிட்டு போகிறார். தற்போது, 5 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சரிதா சினிமாவில் நடிக்க வருகிறார். பிரபல கன்னட இயக்குனர் சந்திரகலா இயக்கும் ‘சில்லும்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.

இயக்குனர் சந்திரகலாதொலை பேசியிலேயே சரிதாவுக்கு கதை சொல்லி படத்தில் நடிக்க சம்மதம் வாங்கி இருக்கிறார். இதில் மனோ ரஞ்சன் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபோல், சினிமாவை விட்டு விலகி இருந்த கன்னட நடிகர் ராகவேந்திர ராஜ்குமாரும் இந்த படத்துக்காக மீண்டும் நடிக்க வருகிறார். இதன் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது.