மீண்டும் பிரித்தானியாவில் வீறுநடை போடும் ஈழமுரசு பத்திரிகை!

April 07, 2017

கடந்த 1995ஆம் ஆண்டில் இருந்து பிரித்தானியா உட்பட மேற்குலக நாடுகளில் ஈழத்தமிழர்களின் அடிநாதமாய் வலம் வந்த தமிழ்த் தேசிய ஊடகமான ஈழமுரசு பத்திரிகை மீண்டும் தடைகளையும், நெருக்கடிகளையும் தாண்டிப் பிரித்தானியாவில் வீறுநடை போடத் தொடங்கியுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பிரான்சில் ஈழமுரசு பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலை முயற்சியை அடுத்து ஈழமுரசு பத்திரிகையின் பிரித்தானியப் பதிப்புக்கள் இடைநிறுத்தம் பெற்றிருந்தன. எனினும் 2015ஆம் ஆண்டின் முற்பகுதியில் இருந்து மீளவும் பிரான்சில் ஈழமுரசு பத்திரிகை வெளிவந்த வண்ணமிருந்தது.

இந்நிலையில் பல்வேறு நெருக்கடிகளையும், தடைகளையும் தாண்டி மீண்டும் இவ்வாரம் முதல் பிரித்தானியாவில் ஈழமுரசு பத்திரிகை வெளிவரத் தொடங்கியுள்ளது.

பணத்தை வாரியிறைத்து ஊடகவியலாளர்களையும், கலைஞர்களையும் விலைக்கு வாங்கி, அதன் மூலம் மெல்லத் தமிழ் ஊடகப் பரப்பை ஆக்கிரமித்துப் புலம்பெயர் தமிழர்களிடையே சிங்களத்தின் நிகழ்ச்சி நிரலைத் திணிப்பதற்கு சில நாசகாரிகள் எடுக்கும் முயற்சிக்குச் சவாலாக மீண்டும் பிரித்தானியாவில் ஈழமுரசு பத்திரிகை களமிறங்குகின்றது.

அதிலும் குறிப்பாகத் தமிழர்களின் குருதியில் சிங்கள இரத்தம் ஓடுகின்றது என்று சிங்களத்திற்கு துதிபாடும் பெருந்தொழில் நிறுவன நாசகாரிகளுக்குப் பெரும் சவாலாக ஈழமுரசு அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

கடந்த காலத்தில் பிரித்தானியாவில் ஈழமுரசுப் பத்திரிகை வெளிவருவதற்கு ஆதரவு நல்கிய எமது உறவுகளும், வணிகப் பெருந்தகைகளும் தொடர்ந்தும் பிரித்தானியாவில் ஈழமுரசு பத்திரிகை வீறுநடை போடுவதற்குத் தமது ஆதரவை வழங்குவார்கள் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை.

பிரித்தானியாவில் வணிக விளம்பரங்களுக்கும், ஈழமுரசு பத்திரிகையுடன் இணைந்து நீங்கள் செயற்படுவதற்குமான தொடர்புகளுக்கு: மோகன் - 07904 631 883.

செய்திகள்
திங்கள் June 19, 2017

ஏவ்றி பிராங்கோ தமிழ்ச்சங்கம், ஏவ்றி தமிழ்ச்சோலையின் இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று முன்தினம் (17.06.2017) சனிக்கிழமை பாரிசின் புறநகர்ப் பகுதிகளில் ஒன்றான ஏவ்றி பகுதியில் காலை 9.00 மணிக்கு ஆரம்பமாக