முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம்!

April 17, 2018

முக்கிய சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் அறிவுறுத்தியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

 இதன்படி வெலிக்கடை, மகசின், போகாம்பரை, நீர்கொழும்பு, அங்குனுகொலபலஸ், மாத்தறை, குருவிட்ட உள்ளிட்ட சிறைச்சாலைகளின் தலைமை அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் பல சிறைச்சாலைகள் தலைமை அதிகாரிகளுக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  எவ்வாறாயினும், இது வழமையாக இடம்பெறும் செயற்பாட்டுக்கு அமையவே அமுலாக்கப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன்   தெரிவித்தார். 

செய்திகள்
வெள்ளி யூலை 20, 2018

சிறிலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 ஆவது அகவையில் ஊடகத்துக்கு பங்களிப்புச் செய்த 9 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.