முக்கிய பல்கலை மூன்றில் புதிய வைத்திய பீடங்கள்!

Wednesday November 15, 2017

புதிதாக வைத்திய பீடங்களை ஆரம்பித்து வருடாந்தம் அதிகளவான மாணவர்களுக்கு வைத்தியக் கல்வி வழங்கவுள்ளதோடு, தற்போது இதற்காக நிலவும் போட்டியைக் குறைக்க முடியும் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

வைத்திய கல்வியை விஸ்தரிக்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள தீர்மானத்திற்கு அமைய, வடமேல், சப்ரகமுவ மற்றும் மொரட்டுவை ஆகிய பல்கலைக்கலகங்களில் புதிய வைத்திய பீடங்கள் மூன்றை நிறுவ முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்பொருட்டு 2018ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட யோசனையில் 1250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.