முக ஸ்டாலின் - வைகோ சந்திப்பு !

Wednesday November 28, 2018

தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்தித்து பேசினார்.

திமுக பொருளாளர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில், திமுக கூட்டணியில் மதிமுக, விசிக கூட்டணியில் இல்லை. தோழமைக் கட்சிகள் தான் என தெரிவித்திருந்தார். கூட்டணி குறித்து துரைமுருகன் கூறிய இந்த பதிலால் பல்வேறு கருத்துக்கள் எழுந்தன.

இந்நிலையில், தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின் போது துரைமுருகனும், திமுக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.

அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ கூறுகையில், மூன்று கல்லூரி மாணவிகளை எரித்துக் கொன்ற வழக்கில் சிறையிலிருந்த 3 பேரை விடுவித்துள்ளனர். சிறையிலிருக்கும் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் விடுதலை செய்திருக்க வேண்டும். ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்துக்கு திமுக முழு ஆதரவு தரும் என மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக தலைவர் ஸ்டாலின் அளிக்கும் ஆதரவே கூட்டணிக்கான விளக்கமும் கூட என தெரிவித்துள்ளார்.