முதலமைச்சர் மீது டெனீஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு!

செப்டம்பர் 20, 2017

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தன்னை போக்குவரத்துத் துறை மற்றும் கடற்றொழில் துறை அமைச்சிலிருந்து நீக்கியமை சட்டத்துக்குப் புறம்பானது எனத்தெரிவித்து நேற்று(19) கொழும்பு உச்சநீதிமன்றத்தில் முன்னாள் போக்குவரதத்துத் துறைஅமைச்சர் டெனீஸ்வரன் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில், அமைச்சர் பதவியிலிருந்து தம்மை விலக்குவதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரனுக்கு அதிகாரமில்லை. அத்துடன் அந்த அதிகாரம் ஆளுநருக்கே உண்டு எனவும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 3ஆம் நாள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

 

செய்திகள்