முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தேர்தல் நடுநிலைமை தமிழர் பாராட்டு

வியாழன் ஓகஸ்ட் 06, 2015

கோடரிக் காம்பு போல் தமிழ் இனத்தை அழிக்கும் தமிழரசுக் கட்சியின் அங்கத்தவர்களைக் கொண்ட கூட்டமைப்புக்குத் தனது ஆதரவைக் கொடுக்காது, நடுநிலைமை வகிக்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களின் கருத்து வெளிப்பாடு வாழ்த்துதற்குரியதாகும்.

 
தேர்தலில் எப்படி மக்கள் வாக்களிக்கவேண்டுமென்று இங்கிலாந்தில் அவர் பேசிய பேச்சும் நல்லூர் இந்து மகா சபைக்கூட்டத்தில் இலங்கையில் காணாமற்போய்விட்ட தமிழரின் சரித்திரத்தைப் பற்றியும் சிங்களவரின் பொய்யான சரித்திரத்தையும் உலக நிபுணர்களிடம் சரியாகக் கோரி அவற்றை நாம் வெளிக்கொண்டுவர வேண்டும் என்ற அவரது கருத்துக்களும் இங்கு பிரதானமானது.

 
2009இற்குப் பின் தமிழர்கள் தேடிக்கொண்டிருந்த தலைவர் ஒருவரை நாம் கண்டுபிடித்துள்ளோம். தமிழ் மக்கள் தேர்தலில் தமிழரசுக் கட்சியைத் தோற்கடித்துப் புதிய தலைமையை உருவாக்கும்போது விக்னேஸ்வரன் அவர்கள் அத்தலைமையை ஏற்றுக்கொள்வார் என ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு நம்புகின்றது.
 
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் இங்கிலாந்தில் பேசிய பேச்சின் முக்கிய கருத்துக்களைப் இங்கே பார்க்கலாம்: