முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக அமைச்சர் கடிதம்!

வியாழன் டிசம்பர் 06, 2018

மேகதாது அணை திட்டம் தொடர்பாக முன்னாள் முதல்வர்கள் மற்றும் முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர்களுடன், கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருவில் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மேகதாது அணை தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு கர்நாடக நீர்பாசன அமைச்சர் டி.கே.சிவக்குமார் கடிதம்  ஒன்று எழுதி உள்ளார்.

கர்நாடக மக்களுக்கு மேகதாது அணை எந்த அளவுக்கு தேவை என்பதை தமிழகத்திற்கு விளக்க விருப்பம். மேகதாது விவகாரத்தை சுமுகமாக பேசித் தீர்க்க கர்நாடக அரசு விரும்புகிறது. காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண கர்நாடக அரசும், மக்களும் விரும்புகிறோம்.

மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் கடலில் கலக்கும் மேட்டூர் அணை உபரிநீரை தடுக்கலாம். மேகதாது திட்டம் குறித்து விவாதிக்க தங்களை சந்திக்க நேரம் வழங்க வேண்டும் என கூறி உள்ளார்.