முதல்வர் பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

Saturday May 05, 2018

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தின் முதல்வராக இருந்து வருபவர் எடப்பாடி பழனிசாமி. இவரது வீடு கிரீன்வேஸ் சாலையில் அமைந்துள்ளது.

இந்நிலையில், கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று தகவல் கிடைத்தது. விசாரணையில், கடலூரை சேர்ந்த பிரதீப் என்பவர் மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது.

இதையடுத்து, முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு தீவிர  சோதனை நடத்தினர். இறுதியில் அது புரளி என தெரிய வந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மிரட்டல் விடுத்த நபர் குறித்து காவல் துறையினர்   தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.