முனைவர். ம. நடராஜன் அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம் - தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு

வியாழன் மார்ச் 22, 2018

ஈழத்தமிழர்களுக்காய் தமிழ்நாட்டிலிருந்து ஓய்வற்றுத் துடித்துக் கொண்டிருந்த இதயம் ஒன்று இப்போது நிரந்தரமாகவே துடிப்பதை நிறுத்திக்கொண்டது.

முனைவர் ம. நடராஜன் எம்மினத்தின் துயரங்களை தன் நெஞ்சிலே சுமந்த மகத்தான மனிதர். சர்வதேசமே ஈழத்தமிழர்களின் துயரைக் கண்டும் காணாதது போல் தவிர்த்த வேளையிலும் எமக்காக ஓங்கி ஒலித்த குரல்களில் இவருடைய குரலும் ஒன்று. ஈழத்தில் நடைபெற்றது ஓரு கொடூரமான இனப்படுகொலையே என்பதை பதிவுசெய்வதில் இவரது பேச்சும், எழுத்தும் காத்திரமான பங்கு வகித்திருந்தது. தமிழகத்தின் சிற்றூர்களில் இருந்து ஐரோப்பியப் பாராளுமன்றம் வரை எம்மினத்திற்கு ஆதரவாக ஒலித்தது அவரது குரல். இனப்படுகொலைக்கு நீதிகேட்டு நடாத்தப்பட்ட போராட்டங்களில் எம்மோடு இணைந்திருந்தன அவரது கைகள்.

அதேவேளை எங்கள் போராட்ட வரலாற்றையும் போரின் அவலங்களையும் மாவீரர்களின் ஈகங்களையும் ஆவணமாக்கும் முயற்சியான முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவும் பணியிலும் மாபெரும் பங்கெடுத்தன இவரது தோள்கள். முள்ளிவாய்க்கால் முற்றத்தை நிறுவுவதற்காக தனது பூர்வீக நிலத்தையே மனமுவந்து ஈய்ந்தளித்தது இவரது பேருள்ளம். முனைவர் ம. நடராஜனின் மறைவுச் செய்திகேட்டு திகைத்து நிற்கும் பிரான்சு தமிழ்ச்சோலைப் பள்ளிச் சமூகம், அன்னாரை இழந்து தவிக்கும் உறவுகளின் துயரில் கண்ணீருடன் பங்கெடுத்துக் கொள்கிறது.

திரு. க. ஜெயகுமாரன்

பொறுப்பாளர்

21-03-2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் - பிரான்சு