முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே கைது

Monday April 16, 2018

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்கு கரம் போட் கொள்வனவில்  39 மில்லியன்ரூபா நிதியை மோசடி செய்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

மஹிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் அமைச்சுக்கு கரம் போட் கொள்வனவு செய்த சந்தர்ப்பத்தில், 39 மில்லியன்ரூபா நிதியை அவர் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் அமைச்சர் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.