முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மருத்துவமனையில் திடீர் அனுமதி!

Monday June 11, 2018

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் உடல்நலக்குறைவால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து அரசியல் நிகழ்வுகளில் அதிகம் பங்கேற்காமல் இருந்து வருகிறார்.

 மேலும் அவர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் வாஜ்பாய் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ சிகிச்சைக்காக வாஜ்பாய் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் வாஜ்பாயின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார்.