முன்னாள் போராளி ஒருவர் மரணம்!

December 07, 2017

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோட்டப் பொறுப்பாளராக இருந்த முன்னாள் போராளி ஒருவர் டெங்கினால் இன்று உயிரிழந்துள்ளார். வவுனியா மாமடு- சேனைப்பிலவைச் சேர்ந்த பிறையாளன் என்று அழைக்கப்படும் 42 வயதுடைய இரத்தினசிங்கம் ஆனந்தராசா என்பவரே உயிரிழந்தவராவார். 

டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இவர் முல்லைத்தீவு - மாஞ்சோலை வைத்தியசாலையில் கடந்த ஆறு நாட்களாக அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று திடீரென வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக அவர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

செய்திகள்
வெள்ளி December 15, 2017

சாவகச்சேரி நகர சபைத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் தெரிவில் தமிழரசுக் கட்சியினருக்கு இடையில் கட்சித் தலைமையகத்தில் நேற்று(14) ஏற்பட்ட கடும் வாக்குவாதம் அடிதடிவரை சென்றுள்ளது.