முல்லைத்தீவில் பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம்!

ஒக்டோபர் 13, 2017

முல்லைத்தீவு மாவட்டம் கற்சிலைமடு அ.த.க.பாடசாலை, பண்டாரவன்னியன் மகாவித்தியாலயம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவீரன் பண்டாரவன்னியனை நினைவுகூரும் முகமாக இப்பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அலுவலக முறைப்படி குறித்த பெயர் மாற்றம் இடம்பெற்ற பெயர்ப் பலகையினை கடந்த 6ஆம் திகதி வலயக் கல்விப் பணிப்பாளரால் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது. அத்துடன் அன்றைய தினம் குறித்த பாடசாலையில் ஆசிரியர் தினமும் நடைபெற்றது.

குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக துணுக்காய் வலயக் கல்விப் பணிப்பாளர் ரவிச்சந்திரனும், மதிப்புறு விருந்தினர்களாக வைத்தியர் வன்னியசிங்கம், பழைய மாணவர் சங்கச் செயலாளர் வன்னியூர் செந்தூரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர்.பாடசாலை நிர்வாகத்தினர், பெற்றோர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 18, 2018

 சுடரொளியில் இணைந்த பல ஊடகவியலாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருப்பதாக சொல்லப்படுகின்றது.