முல்லைத்தீவு மீனவர்கள் இன்றும் போராட்டம்!

Friday August 10, 2018

தடை செய்யப்பட்ட வலைகளின் பயன்பாட்டை நிறுத்த கோரி முல்லைத்தீவு மாவட்ட மீனவர்கள் இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.   கடந்த 2 ஆம் திகதி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தினை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அதேவேளை எதிர்வரும் 12 ஆம் திகதி மீன்பிடி அமைச்சருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடப் போவதாகவும், அதன்பின்னரே மீனவர்களுக்குத் தீர்வை வழங்க முடியும் எனவும் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.