முல்லைத்தீவை முஸ்லிம் தீவாக மாற்ற முயற்சி, முஸ்லிம் இனவாத அணியின் நகர்வுகள் அம்பலம்

யூலை 16, 2017

தமிழர் தாயகத்தின் பூர்வீக பூமியான முல்லைத்தீவை முஸ்லிம் தீவாக மாற்றிக் காட்டுவோம் என்ற கோஷத்துடன் முஸ்லிம் அணியொன்று மிகத் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளமை தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்த நிலையில், சமூன்ஷிபான் என்ற முஸ்லிம் இளைஞன் முல்லைத்தீவை முஸ்லிம் தீவாக மாற்றிக் காட்டுவோம் என வெளிப்படையான தனது முகப்புத்தகத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

அவரது பதிவுக்கு பல தரப்பினரிடம் இருந்தும் கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ள நிலையில், குறித்த சமூன்ஷிபான் என்பவர் தொடர்பாக உருத்திரகுமார் ஜெயரட்ணம் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். 

அந்தப் பதிவில் சமூன்ஷிபான் என்ற 'முஸ்லிம் தீவிரவாதி' தொடர்பான பல்வேறு உண்மைகளை அவர் வெளியிட்டிருக்கின்றார். 

அவரது பதிவு வருமாறு, 

முல்லைத்தீவை முஸ்லீம் தீவாக மாற்றிக்காட்டுவோம் என்ற கருத்தினையும் வேறு சில வக்கிரமான கருத்துக்களையும் 'பேஸ்புக்' கில் தெரிவித்து வரும் சமூன்ஷிபான் என்பவர் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் சமுர்த்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுகிறார். 

வட – மாகாணசபை உறுப்பினர் ஜெனோபர் இவரது தாய் மாமனாவார். இந்தக் கூட்டணிதான் தற்போது அமைச்சர் றிசாட் பதியுதினின் முல்லைத்தீவுக்கான தொடர்பாளர்கள்.

சமூன்ஷிபானின் மூத்த சகோதரன் சமூன் சாஜித் முல்லைத்தீவுக் கூட்டுறவுத் திணைக்களத்தில் அபிவிருத்தி உதவியாளராகக் கடமையாற்றுகிறார்.

ரிபாய் என அறியப்படும் இன்னுமொருவர் ஜெனோபரின் ஒன்று விட்ட சகோதரன். இவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் இருவருடங்களுக்கு முன் பிரதம எழுதுவினைஞராக பணியாற்றியவர் பின்னர் இடமாற்றம் பெற்றுப் புத்தளம் சென்றார்.

தற்பொழுது கூழாமுறிப்பினைக் குறிவைத்து நடத்தத் திட்டமிடப்பட்டிருக்கும் சட்டவிரோத நில அபகரிப்பு மற்றும் வீட்டுத்திட்டத்தினை செயற்படுத்தும் நோக்குடன் முல்லைத்தீவு வீடமைப்பு அதிகாரசபை இணைப்பாளராக பதவிமாற்றம் பெற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் திரும்பவும் கடமையாற்றுகிறார்.

இந்த வீட்டுத்திட்ட செயல்திட்டம், மத்தியகிழக்கு உதவியுடன் குமாரபுரத்தில் அரச அதிபரின் ஒப்புதலுடன் கலந்தாலோசிக்கப் பட்டது. சாஜித் மற்றும் ஷிபான் ஆகியோர் இந்தவீட்டுத் திட்டத்துக்காக தமிழர்களின் காணிகளை விலை பேசி வருவதாக நம்பகமாக அறிய முடிகிறது. 

சுமார் 2 கோடி மதிப்புள்ள காணியை வாங்க கடன் பெற்று முதலிட்டுள்ளதாகவும் அறிய முடிகிறது. பெரிய அளவில் காணியை வாங்கி அதைக் காணித்துண்டுகளாகப் பங்கிட்டு முஸ்லிம்களுக்கு வீடமைத்துக் கொடுத்து அதில் இலாபம் ஈட்டுவதுதான் இந்த முதலீட்டின் நோக்கம்.

இந்தக் காணி சுவீகரிப்புத் திட்டத்திற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் குழுவினருக்கு மறைந்த முன்னாள் வட – மாகாண சபை உறுப்பினர் திரு.அன்டனி ஜெயநாதனின் மகன் பீற்றர் இளஞ்செழியன் முழு உதவி ஒத்தாசைகளைச் செய்து வருவதாகவும் நம்பகமாக அறியப்படுகிறது.

பீற்றர் இளஞ்செழியனே தமிழரசுக் கட்சியின் முல்லைத்தீவு இளைஞர் அணித்தலைவராக இருப்பதனால் இதற்கும் மறைமுகமாகத் தமிழரசுக் கட்சி துணை போகிறதா....??? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் இரண்டு வருடங்களுக்கு மேலாக இயல்பாகத் தமது கடமைகளைச் செய்வதற்கு கடும் நெருக்கடிகளை அமைச்சர் றிசார்ட் பதியுதீனின் குழு கொடுத்து வருகிறது.

அத்துடன் தற்போது பணியிலிருக்கும் உத்தியோகத்தர்களையும் தமது ஏவலாளர்களாக மாற்றி விட அமைச்சர் றிசாட்டின் குழு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பிரதேச செயலாளர் திரு. குணபாலன் இந்தக் காடழிப்புத் திட்டத்தினை கடுமையாக எதிர்த்ததன் காரணமாக கொக்கிளாய் முகத்துவார சிக்கல்களை காரணமாகக் கூறி அவரைக் கட்டாயமாக இடம்மாற்ற நடவடிக்கை எடுத்தவர் அமைச்சர் றிசாட் பதியுதீனே என் உறுதியாக அறிய முடிகிறது.

வட – மாகாண சபை உறுப்பினர் ஜெனோபர் ஊடாக பிரதேச செயலாளர் திரு. குணபாலன் இடம்மாற்றப்படுவதில் பெரும் முனைப்புக் காட்டியது அமைச்சர் றிசாட் பதியுதீனின் குழு.

முல்லைத்தீவு அரச அதிபர் அமைச்சர் றிசார்ட் பதியுதீனுக்கு உடந்தையாக செயற்பட்டு இந்த இடமாற்றத்திற்குத் துணை போயிருக்கிறார்.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திரு. சிவமோகன் இவ்விடயங்களைத் தெரிந்திருந்தும் தெரியாதது போல் இருப்பது அவரது மறைமுக ஒத்துழைப்பு இந்தத் திட்டத்திற்கு இருப்பதாக பலர் மத்தியிலும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. 

இதே வேளையில், வட – மாகாண சபை உறுப்பினர் திரு. ரவிகரன் தொடர்ந்து இச்சட்டவிரோத, மக்கள் விரோத நடவடிக்கைக்குத் தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு, பெரும் மறைமுக சதி நாசகாரத் திட்டங்களுடன் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள காடழிப்புத் திட்டத்தை எதிர்கால சமூக, சூழல், பொருளாதார நன்மை கருதி எவ்வழியிலும் எதிர்க்க வேண்டிய கடப்பாடு இயற்கையை நேசிக்கும் அனைவரதும் தலையாய கடமையாகும்.

'வன வளங்களையும் ஜீவராசிகளையும் பாதுகாக்க ஒன்றிணைவோம்'

செய்திகள்