முள்ளிவாய்க்காலை நினைவுபடுத்தும் அலெப்போ

வெள்ளி டிசம்பர் 16, 2016

சிரியாவின் அலெப்போ நகரில் தற்போது இடம்பெற்று வரும்யுத்தமானது 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நிகழ்வுகளை ஒத்திருப்பதாக சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் இலங்கைப் பணிப்பாளர் அலன் கீனன் தனது ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

2009ஆம் அண்டு சிறீலங்கா அரசாங்கம் பின்பற்றிய முறையை நிராகரிப்பதற்குத் தவறியமையே தற்போது சிரியாவின் அலெப்போ நகரில் இடம்பெற்றுவரும் பேரழிவுகளுக்கு வித்திட்டுள்ளது எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.