முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நாள் நினைவாக கவிதைப்போட்டி

திங்கள் மே 09, 2016

முள்ளிவாய்க்காலில் தம் இன்னுயிர்களை அர்ப்பணித்த எம் உறவுகளை நினைவுகூறும் வகையில் பெர்லின் நகரில் முள்ளிவாய்க்கால் – வலி சுமந்த மாதமும் மாறாத ரணங்களும் என்ற தலைப்பில் கவிதைப்போட்டி நடைபெற்றது. 

ஈகைச்சுடர் ஏற்றி, மலர்வணக்கத்துடனும் அகவணக்கத்துடனும் போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டன. போட்டியில் சிறுவர்கள் மட்டுமின்றி பெரியோர்களும் பங்குபற்றினர். பங்குபற்றியவர்கள்  கவிதைப்போட்டி என்பதற்கு அப்பால், முள்ளிவாய்க்காலில் மரணித்தவர்களை நினைவுகூறவேண்டும் என்ற அடிப்படையில், தமது உணர்வுகளைக் கவிதையாக வரைந்து, எம்முனே கவிபாடினார்கள். அத்துடன் போட்டியில் வருகை தந்திருந்தவர்களில் சிலர் அவர்களது அனுபவங்களையும், பல கருத்துகளையும் எம்முடன் பகிர்ந்துகொண்டார்கள். இறுதியாக போட்டியாளர்களிற்கு பரிசளித்து, நடுவர்களையும் கௌரவித்து போட்டி நிறைவிற்கு வந்தது.