முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் தொடருந்து நிலையம்!

January 09, 2018

மகாராஷ்டிரா மாநிலத்தில் முழுவதும் பெண் பணியாளர்கள் வேலை செய்யும் மட்டுங்கா தொடருந்து நிலையம் ‘லிம்கா-2018’ உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. 

 மத்திய  தொடருந்து   நிர்வாகத்தின்கீழ் இயங்கிவரும் மகாராஷ்டிர மாநில தொடருந்து கோட்டத்துக்கு உட்பட்ட மட்டுங்கா தொடருந்து  நிலையம் மும்பை நகரில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

இந்த தொடருந்து  நிலையத்தில் உள்ள பல்வேறு பிரிவு பணியிடங்களில் வேலை செய்யும் நபர்கள் அனைவரையும் பெண்களாக நியமிக்க மத்திய தொடருந்து  துறையின் பொது மேலாளர் டி.கே. ஷர்மா திட்டமிட்டார். இதையடுத்து, பயணச்சீட்டு விற்பனை, கொடி காட்டுபவர்,தொடருந்து  காவல் துறை , சிக்னல் பிரிவு அதிகாரி, துப்புரவாளர்கள் என 41 பேர் மட்டுங்கா தொடருந்து  நிலைய   மாஸ்டர் மம்தா குல்கர்னி என்பவர் தலைமையில் இங்கு பணியாற்றி வருகின்றனர்.

இந்த குழுவினர் கடந்த ஆறுமாத காலமாக மட்டுங்கா தொடருந்து  நிலைய நிர்வாகத்தை திறம்பட கையாண்டு வருவதை சிறப்பிக்கும் வகையில் இந்த சாதனை 2018-ம் ஆண்டுக்கான லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

செய்திகள்