முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர் வாகன விபத்தில் பலி!

ஒக்டோபர் 12, 2017

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம்.ரி.ஹசன் அலியின் சகோதரரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினருமான ஜப்பார் அலி(வயது 57) வாகன விபத்தில் சிக்கி இன்று உயிரிழந்துள்ளார்.

நிந்தவூரிலிருந்து, திருமலை நோக்கிச் சென்ற இவரது காரும், எதிர்த்திசையில் வந்த பேருந்து ஒன்றும் கிண்ணியா பாலத்திற்கு அருகிலுள்ள உப்பாறு எனும் இடத்தில் நேற்றைய தினம் மோதி விபத்துக்குள்ளானது.

குறித்த விபத்தில், வாகனத்தில் இவருடன் கூடச்சென்ற மூவரும் காயங்களுக்கு உள்ளானதுடன், படுகாயங்களுக்கு உள்ளான லாபீர் மற்றும் ஜப்பார் அலி ஆகியோர் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக திருமலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தனர்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஜப்பார் அலி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதேவேளை, இந்த விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியாப் காவல் துறையினர்  மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகள்