மூன்றரைக் கோடிப் பெண்களின் மதுவிலக்கு எனும் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிட முன்வராமல்..? - கருணாநிதி கேள்வி

February 23, 2016

மூன்றரைக் கோடிப் பெண்களின் மதுவிலக்கு எனும் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிட முன் வராமல்அ.தி.மு.க. அரசுபதவிக்கு மேலும்  16 ஆயிரம் பேர் எனச் சொல்லி ஏமாற்றிட எத்தனிப்பது,  “பூ” கேட்கும் மகளிர்க்கு “காகிதப் பூ” வைக் காட்டுவதற்கு ஒப்பானதாகும்தமிழக மகளிர் கேட்டது “வெண்ணெய்”ஜெயலலிதா தருவது “சுண்ணாம்பா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கருணாநிதி. 

இது குறித்து அவரின் இன்றைய கடிதத்தில் கூறியுள்ளதாவது,’

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை ஐம்பது சதவிகிதமாக உயர்த்த வகை செய்யும் மசோதாவினை அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாகபேரவையின் இறுதி நாளன்று எந்தவிதமான முன்னறிவிப்பும்விவாதமும் இல்லாமல் ஒரே நாளில் முன்மொழிந்து அன்றைக்கே பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறார்கள். மகளிர்பால் அ.தி.மு.க. அரசுக்கு திடீரென்று இவ்வளவு அக்கறை வரக் காரணம் விரைவில் வரவிருக்கின்ற சட்டப் பேரவைப் பொதுத் தேர்தல்தான் என்பது கிராமங்களிலே உள்ள சிறுமிகளுக்குக் கூடப் புரியும். ஐந்தாண்டு கால ஆட்சியில் இதைப் பற்றி அரைக்கணம் கூட நினைத்துப் பார்க்காமல்தேர்தல் இரண்டு மாதங்களில் வருகிறது என்றதும்இந்த அறிவிப்பினைச் செய்து தாய்மார்களின் கவனத்தைக் கவர்ந்து காரியத்தைச் சாதித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.  ஆனால் அ.தி.மு.க. அரசு “காரியம் ஆகும் மட்டும் காலைப்பிடி;  காரியம் ஆனபிறகு கழுத்தைப் பிடி” என்ற பழமொழிக்கேற்பவே நடந்து கொள்கிறது என்பது தமிழ்நாட்டுத் தாய்மார்களுக்கு நன்றாகவே தெரியும்! 

பொதுவாக இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பேரவையில் இரண்டு நாட்கள் முன்பாகவே முன்மொழியப்பட்டுஅதற்குப் பிறகு ஒரு நாள் நிகழ்ச்சி நிரலில் முன்கூட்டியே குறிப்பிட்டுஅதன் பிறகு விவாதித்து முடிவெடுப்பதுதான் வழக்கம்.  ஆனால் இந்தத் தீர்மானத்தைப் பொறுத்தவரை தீர்மானம் முன்மொழிதலும்விவாதித்தலும் ஒரே நாளில் நடைபெற்றிருப்பதிலிருந்தேஆளுங்கட்சியினரின் தேர்தல் நேரச் சலுகை இது என்பது நன்றாகவே விளங்குகிறது.  

ஆனால்தாய்மார்களுக்கு முதன் முதலாக உள்ளாட்சிகளில் 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது 1996ஆம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியிலேதான். அதன் காரணமாக தமிழகம் முழுவதிலும் 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி பெற்றனர்.

1989இல் இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில்வேலை வாய்ப்புகளில்  பெண்களுக்கு 30 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் தி.மு. கழக ஆட்சியில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டு,பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலை வாய்ப்புகள் பெற வழிவகுக்கப்பட்டது.

1990இல் தி.மு. கழக ஆட்சியிலேதான் இந்தியாவிலேயே முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கிதனிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.  உள்ளாட்சி அமைப்புகளில் மகளிர்க்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. 

இந்த நேரத்தில் தி.மு. கழகம் ஆட்சியிலே இருந்த காலத்தில்தமிழகத் தாய்மார்களுக்காக என்னென்ன சாதனைகளைச் செய்திருக்கிறது என்பதை நினைவுபடுத்துவது எனது கடமையெனக் கருதுகிறேன்.

 • 1973இல் தமிழக காவல் துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அதனால்இன்று கூடுதல் டி.ஜி.பி. வரை ஆயிரக்கணக்கான பெண்கள் -காவல்துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்று மகிழ்கின்றனர். 

 • 1975இல் ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம்விதவை மறுமணத் திட்டம் ஆகியவை தொடங்கப்பட்டன. 

 • சாதி வேறுபாடுகளை அகற்றும் நோக்கத்தில்1968இல் தொடங்கப்பட்டு தங்கப் பதக்கம் வழங்கி ஊக்குவிக்கப்பட்ட கலப்புத் திருமணத் திட்டம், 1989இல் அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம் எனப் பெயரிடப்பட்டு,கலப்புத் திருமணம் செய்து கொண்ட தம்பதியருக்கு 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.  1996-இல் இந்த நிதி உதவி 10ஆயிரம் ரூபாய் என உயர்த்தப்பட்டதுடன்,மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் எனில் 1997முதல் 20 ஆயிரம் ரூபாய் என்றும் 2010 முதல் 25ஆயிரம் ரூபாய் என்றும் உயர்த்தப்பட்டது. 

 • 1989இல் 8ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களின் திருமணங்களுக்கு உதவிட மூவலூர் மூதாட்டியார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுஇத்திட்ட நிதியுதவியாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. கிராமப்புறப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 1996இல் 10ஆம் வகுப்பு வரை படித்த ஏழைப் பெண்களுக்கு 10ஆயிரம் ரூபாய் என நிதியுதவியை உயர்த்தியதுடன், 2006இல் 15 ஆயிரம் ரூபாய் எனவும் 2008இல் 20 ஆயிரம் ரூபாய் எனவும்2010இல் 25 ஆயிரம் ரூபாய் எனவும் உயர்த்தப்பட்டது. 

 • ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவைத் தாய்மார்களின் மகள் திருமண நிதி உதவித் திட்டம்டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமணத் திட்டம்அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண நிதி உதவித் திட்டம்ஆகிய மூன்று திட்டங்களின் கீழ் வழங்கப்பட்ட நிதியுதவி  1989 இல் 5 ஆயிரம் ரூபாய் என்றும், 1997-98இல் 7 ஆயிரம் ரூபாய் என்றும், 1999-2000இல் 10 ஆயிரம் ரூபாய் என்றும்,  2007ல்  15ஆயிரம் ரூபாய் என்றும், 2008இல் 20 ஆயிரம் ரூபாய் 2010இல் 25 ஆயிரம் ரூபாய் என்றும் படிப்படியாக  உயர்த்தப்பட்டுள்ளது

 • 1989இல்ஏழைப் பெண்கள் உயர்கல்வி பெறுவதை ஊக்குவித்திட ஈ.வெ.ரா. நாகம்மையார் நினைவு மகளிர் இலவசப் பட்டப் படிப்புத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் 2008முதல் ஏழைப் பெண்களுக்கு பட்ட மேற்படிப்பு வரை இலவசக் கல்வி அளிக்கப்பட்டது. 

 • 1989இல் ஏழை கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச்சத்து பெறுவதற்காக நிதியுதவி வழங்கும் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2006இல் இத்திட்டத்தின்கீழ் கர்ப்பிணிப் பெண்களுக்கு 6000ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. 

 • ஆதரவற்ற விதவைப் பெண்கள்கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் மாத ஓய்வூதியம் 100 ரூபாய் என்பது 1997 இல் 150 ரூபாயாகவும், 2000இல் 200ரூபாயாகவும் உயர்த்தப் பட்டதுடன்,  2006இல் 200ரூபாய் என்பது 400 ரூபாயாகவும், 2010இல் 500ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. 

 • விதவைப் பெண்களுக்கும்கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் 18 வயதிற்கு மேற்பட்ட மகன் இருந்தாலும் முதியோர் உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கைக்கு வரம்பின்றி உதவித் தொகை வழங்கிட 2.6.1998அன்று ஆணையிடப்பட்டது. 

 • ஏழ்மை நிலையிலுள்ள பெண்களை வாழ வைக்கும் திட்டமாக, 50 வயது கடந்தும் திருமணம் ஆகாமல்உழைத்து வாழமுடியாத சூழலில் வாழ்ந்துவரும் 12 ஆயிரத்து 904 ஏழைப் பெண்களுக்கு மாதம்தோறும் 400 ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டம் ஜூலை 2008 முதல் புதிய திட்டமாகத் தொடங்கப்பட்டுசெயல்படுத்தப்பட்டது. 

 • 2 இலட்சத்து 12 ஆயிரத்து 981 சத்துணவுப் பணியாளர்கள் பயன்பெற காலமுறை ஊதியமும்,ஓய்வூதியத் திட்டமும் அனுமதிக்கப்பட்டது. 

 • கிராமப்புற மகளிர்க்கு மகப்பேறு உதவிகள் எந்த நேரமும் கிடைத்திடும் வண்ணம்அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கூடுதல் செவிலியர்களும் மருத்துவர்களும் நியமிக்கப்பட்டு24 மணி நேர மருத்துவச் சேவை அளிக்கப்பட்டது. 

 • திருக்கோயில்களில் செயல்படும் அறங்காவலர் குழுக்களில் மகளிர் ஒருவரை அறங்காவலராக நியமிப்பது சட்டமாக்கப்பட்டது. 

 • 1989ஆம் ஆண்டு மே திங்களில் கழக அரசு தர்மபுரியில் தொடங்கிய மகளிர் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் கிராமப் புறங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பல  உருவாக்கப்பட்டன. அவற்றின் மூலம் கிராமப்புறப் பெண்கள் குழுவாகச் சேர்ந்து தொழில் புரிந்து வருவாய் ஈட்டி தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்திட முடிந்தது. 

 • 2006 தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிக்கான தினப்படி ஏழரை ரூபாய் என்பது 45ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டது. 

 • 73 இலட்சத்து 60 ஆயிரம் மகளிர் உறுப்பினர்களைக் கொண்ட 4 இலட்சத்து 74ஆயிரத்து 874 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வந்தன. 

 • இக்குழுக்களுக்கு 2009 முதல் வழங்கப்பட்ட வங்கிக் கடன் 9 ஆயிரத்து 845 கோடியே 20 இலட்சம் ரூபாய்;  இதில் மே 2006க்குபின்கடந்த நான்கரை ஆண்டுகளில் வழங்கப்பட்ட வங்கிக் கடன் மட்டும்8 ஆயிரத்து 80 கோடி ரூபாயாகும் என்பது இத்திட்டத்தின் மூலம் மகளிர் முன்னேற்றத்தில் கழக  அரசு செலுத்தி வந்த அக்கறைக்குச் சிறந்த சான்றாகும். 

 • 2006-07ஆம் ஆண்டு முதல்நகர்ப்புற சுயஉதவிக் குழுக்களுக்குச் சுழல் நிதி வழங்கும் திட்டத்தினை அறிமுகப்படுத்தி, 5 ஆண்டுகளில் 96,699 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கு ரூபாய் 96.70 கோடி சுழல்நிதி மானியமாக வழங்கப்பட்டது. 

 • ஆண்டுதோறும் பொதுவாக 25,000 முதல் 30,000 சுயஉதவிக் குழுக்களுக்கு மட்டுமே சுழல்நிதி வழங்கப்பட்டது. ஆனால், 2008-09ஆம் ஆண்டில் அதுவரை சுழல்நிதி பெறாத தகுதி வாய்ந்த 1.50இலட்சம் சுய உதவிக் குழுக்களுக்கும் சுழல்நிதி மானியம் வழங்க அரசு முடிவு செய்து அதன்படி,சுழல் நிதி மானியம் பெறாதஅனைத்து 1,50,000 சுய உதவிக் குழுக்களுக்கும் வங்கிக் கடனுடன் 150கோடி ரூபாய் சுழல்நிதி வழங்கப்பட்டது. 

 • 2009-10 ஆம் ஆண்டில் 70,000 சுய உதவிக் குழுக்களுக்கு 70 கோடி ரூபாய் சுழல்நிதி மானியமாக வழங்க அனுமதி தந்து, 69,000சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.

 • 2010-11 ஆம் ஆண்டில் 50,000 ஊரக சுய உதவிக் குழுக்களுக்கும் 20,000 நகர்ப்புற சுய உதவிக் குழுக்களுக்கும்சுழல்நிதி மானியம் வழங்க 70 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டு;இதுவரை, 63,967 சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பட்டது.

             சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு முன்பு அ.தி.மு.கஆட்சியில் ஒருமுறை கூட ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான் அவர்களுக்கு மூன்று முறை ஊதிய விகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 

             கழக ஆட்சியிலேதான்சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களில் பத்தாண்டுப் பணி முடித்தவர்களுக்குஒரு ஊதிய உயர்வும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு மற்றொரு ஊதிய உயர்வும்  வழங்கப்பட்டது.

              அ.தி.மு.க ஆட்சியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வந்த சத்துணவு சமையலர்கள்,உதவியாளர்கள்அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகிய அனைவருமே கழக ஆட்சியிலேதான் சிறப்பு ஊதிய விகிதம் பெற்றனர்.

சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கழக ஆட்சியிலேதான்முதல்முறையாக 1.6.2009 முதல் மாதந்தோறும் வீட்டு வாடகைப்படிநகர ஈட்டுப்படி ஆகியவைகளும், 100 ரூபாய் மருத்துவப் படியும், 2000 ரூபாய் பண்டிகைக் கால முன்பணமும் வழங்கப்பட்டன. சத்துணவு மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் மாதாந்திர ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் கழக ஆட்சியிலேதான்  ஓய்வுப் பெற்ற சத்துணவு அமைப்பாளர்களுக்கும்அங்கன்வாடிப் பணியாளர்களில் சமையலர்களுக்கும்முதல் நிலை அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் - சமையல் உதவியாளர்களுக்கும்இரண்டாம் நிலை அங்கன்வாடி உதவியாளர்களுக்கும் முறையே மாதந்தோறும் ரூபாய் 700, ரூபாய் 600, ரூபாய் 500 என்று முதல் முறையாக ஓய்வூதியம் வழங்கப்பட்டது. 

முதல் தலைமுறையாக தொழில் முனையும் மகளிர் 250 பேருக்கு 50 ஆயிரம் ரூபாய் வரை மானிய உதவி வழங்கும் திட்டம் 1996இல் அறிமுகம் செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டன.

தொழில் வளாகங்களில் - தொழில் மனை ஒதுக்கீட்டில் மகளிர் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை வழங்கும் திட்டம் 96 முதல் தொடங்கப்பட்டது.

மீனவ மகளிர் கூட்டுறவுச் சங்கங்களுக்கு மோட்டார் பொருத்திய 25 வாகனங்கள் இலவசமாக வழங்கப்பட்டுமீனவமகளிர் மீன்விற்பனைக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

1998இல் முதலில் மதுரையிலும்பின்னர் பல பகுதிகளிலுமாக மொத்தம் 230 இடங்களில் முழுவதும் மகளிர் நடத்தும் நியாய விலைக் கடைகள் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்று வந்தன. 

கிராமப்புறங்களில் மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலமாகச் செயல்படுத்தப்பட்ட மகளிர் சிறுவணிகக் கடன் திட்டத்தின்கீழ் 535 மகளிர் குழுக்களுக்கு 2000ஆம் ஆண்டு அக்டோபர் வரை ரூ.2.33 கோடி கடன் வழங்கப்பட்டது.

திருவள்ளூர்கோவை மாவட்டங்களில் கிராமப்புறங்களுக்கும் பரிட்சார்த்தமாக இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுஅது பெற்றுவரும் வரவேற்பின் காரணமாக அனைத்து மாவட்டங்களின் கிராமப் புறங்களுக்கும் தற்போது விரிவுபடுத்தப்பட்டது.

கழக அரசு வெளியிட்ட ஆணைகளின் மூலம் தொடக்கப் பள்ளிகளில் பெண்கள் அதிக அளவில் ஆசிரியைகளாக நியமனம் செய்யப்படுவதற்கு வழி ஏற்பட்டது. கழக ஆட்சியில் பள்ளிகளில் பணிபுரிந்த  மொத்த ஆசிரியர்கள் 1,66,187பேரில் ஆசிரியைகள் 98,291.

1.6.1975-இல் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் கழக ஆட்சியில் எண்ணிக்கை வரம்பின்றி விதவைப் பெண்கள் எல்லோருக்கும் உதவித் தொகை வழங்கப்பட்டது. 1996 முதல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற்ற விதவைப் பெண்கள் 3,86,149 பேர். 1996முதல் இத்திட்டத்தின்கீழ் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் 63,566 பேர் பயன் பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் தற்போது மூன்றரைக் கோடி பெண்கள் உள்ளனர்.   அவர்கள் அனைவருமே “டாஸ்மாக்”  கடைகளை இழுத்து மூட வேண்டும்மதுவினால் சீரழியும்  குடும்பங்களைக் காப்பாற்ற வேண்டும்மதுவிலக்கை  உடனே நடைமுறைப்படுத்திட வேண்டும் என அ.தி.மு.க. ஆட்சிக்கு எதிராக அறப்போராட்டம் நடத்தினர். அறப்போர்  நடத்திய பெண்களை அ.தி.மு.க. அரசின் காவல் துறையினர் அவமானப்படுத்திடும் வகையில்,மனித உரிமைகளுக்கு  மாறாக நடந்துகைது நடவடிக்கை வரை சென்றனர்.   இவையனைத்தும் தமிழக மகளிர் மனதில் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது.  இதிலிருந்து  மகளிர் கவனத்தைத் திசை திருப்பவேஇந்த 50 சதவிகித இட ஒதுக்கீடு. இதனால் கழக ஆட்சியில் முதன் முதலாக 44,143 பெண்கள் உள்ளாட்சி நிர்வாகங்களில் பதவி பெற்றனர் என்ற எண்ணிக்கை சற்று உயர்ந்து60 ஆயிரம் என ஆகலாம்அதாவது 16 ஆயிரம் பேர் என எண்ணிக்கை உயரலாம். மூன்றரைக் கோடிப் பெண்களின் மதுவிலக்கு எனும் உள்ளக் கிடக்கையை நிறைவேற்றிட முன் வராமல்அ.தி.மு.க. அரசுபதவிக்கு மேலும்  16 ஆயிரம் பேர் எனச் சொல்லி ஏமாற்றிட எத்தனிப்பது,  “பூ” கேட்கும் மகளிர்க்கு “காகிதப் பூ” வைக் காட்டுவதற்கு ஒப்பானதாகும்தமிழக மகளிர் கேட்டது “வெண்ணெய்”ஜெயலலிதா தருவது “சுண்ணாம்பா?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

செய்திகள்
புதன் யூலை 18, 2018

காவல்துறையைக் கைத்தடி துறை ஆக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!