மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிடும் கூகுள்!

April 09, 2018

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டும் மூன்று ஸ்மார்ட்போன்களை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் பிரபல நிறுவனங்களுடன் இணைந்து நெக்சஸ் பிரான்டு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்த கூகுள் 2016-ம் ஆண்டு முதல் தனது வழக்கத்தை மாற்றிக் கொண்டது. இத்துடன் நெக்சஸ் பிரான்டு மாற்றாக பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அந்த வகையில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் தகவல்களில் கூகுள் நிறுவனம் மிட்-ரேஞ்ச் பிக்சல் ஸ்மார்ட்போனினை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. தற்சமயம் சீன வலைத்தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி கூகுள் நிறுவனம் மூன்று பிக்சல் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன் டிசையர் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு கோ இயங்குதளம் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக கூகுள் நிறுவனம் ஹெச்டிசி ஸ்மார்ட்போன் பொறியியல் குழுவினை கைப்பற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹெச்டிசி நிறுவன மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் டிசையர் பிரான்டிங் கொண்டிருந்தன. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் ஆன்ட்ராய்டு ப்ரியர்களுக்கு இது நற்செய்தியாக இருக்கும். முந்தைய நெக்சஸ் ஸ்மார்ட்போன்கள் உயர் ரக சிறப்பம்சங்கள், ஸ்டாக் ஆன்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் குறைந்த விலை கொண்டிருந்தது. 

இதுதவிர கூகுள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போன்களின் பெயரை தெரியாமல் வெளியிட்டுவிட்டதாக கூறப்பட்டது. அந்த வகையில் XDA டெவலப்பர்கள் வழங்கியிருக்கும் தகவல்களில் புதிய ஸ்மார்ட்போன் செர்ரிபிக் என அழைக்கப்படலாம் என தெரியவந்துள்ளது.

செய்திகள்
செவ்வாய் April 03, 2018

ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!

ஞாயிறு April 01, 2018

திரைப்பட ரசிகர்கள் அடுத்து என்ன படம் பார்க்கலாம் எனப் பரிந்துரைக்கும் இணையதளங்கள் பல இருக்கின்றன. 

ஞாயிறு April 01, 2018

இணையத்தில் பல வகையான எழுத்துருக்கள் உள்ளன. ஒரு சில எழுத்துருக்கள் எளிமையாகவும்