மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு - 7 பேர் பலி

புதன் சனவரி 09, 2019

மெக்சிகோவில் கேளிக்கை விடுதியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் 2 பேர் அங்கிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடினர். இதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தனர்.

படுகாயம் அடைந்த 2 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலன்இன்றி இறந்தார்.

துப்பாக்கி சூடு நடத்திய நபர்கள் யார்? அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக காவல் துறை  தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.