மெட்ரோ பணியால் வெளியேறும் கெமிக்கல் கலவை : மக்கள் அச்சம்

April 20, 2017

சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப் பணியின் போது பூமிக்கு அடியில் இருந்து மீண்டும் கெமிக்கல் கலவை வெளியேறு உள்ளது. இதனால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கிழக்கு முத்தையா தெரு பகுதியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக பூமிக்கு அடியில் இருந்து கெமிக்கல் கலவை பீய்ச்சியடித்து வெளியேறி வருகிறது. அக்கலவை தெருவில் குளம்போல் தேங்கியுள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபோல் இப்பகுதியில் இரண்டாவது முறையாக நடைபெற்றுள்ளது .

மெட்ரோ பணியால் சென்னையில் அங்காங்கே சாலைகளில் திடீர் பள்ளங்கள், வீடுகளில் சிமென்ட் கலவைகள் வெளியேறுவது, விரிசல்கள் ஏற்படுவது, மணல் பொங்கி வருவது போன்ற சம்பவங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ரசாயன கலவைகளும் வெளியேறி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

செய்திகள்