மென்பானங்கள் பருகுவதால் உடலுறுப்புகளுக்கு ஏற்படும் அபாயம்

வியாழன் சனவரி 21, 2016

முந்தைய தலைமுறையினரைவிட இன்றைய தலைமுறையினர் மத்தியில் நீரிழிவு, இதயநோய்கள் அதிகமாக வருவதற்கான காரணத்தை அண்மையில் அமெரிக்க உடல்நல நிறுவனம் ஆய்வொன்றை நடாத்தியுள்ளது.  1003 பேரிடம் இந்த ஆய்வு நடாத்தப்பட்டது. இவர்கள் அனைவரும் 45 வயதுடையவர்களாவர்.

இவர்கள் அனைவரும் 4 வகையாகப் பிரிக்கப்பட்டனர். இவர்களில் ஒவ்வொரு நாளும் குடிப்பவர்கள், எப்போதாவது குடிப்பவர்கள், அவ்வப்போது குடிப்பவர்கள், எப்போதுமே குடிக்காதவர்கள் எனப் பிரிக்கப்பட்டனர்.

இவர்கள் அனைவரிடமும் 6 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆய்வுகள் நடாத்தப்பட்டன. இதில் ஒவ்வொருநாளும் குடிப்பவர்களின் உள்ளுறுப்புக்களில் அதிகளவு கொழுப்புச் சேர்ந்து உடல் நலம் வேகமாக பாதிப்படைந்ததை அவதானித்தனர். இந்தக் கட்டுரை அமெரிக்க இதயநல பத்திரிகையில் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதயநோய் தொடர்பான சில விளக்கங்களைப் பாருங்கள்.

சோடா போன்ற பானங்கள் பருகுவதால்இ கல்லீரல்இ கணையம் மற்றும் குடல் போன்ற உள்ளுறுப்புகள் வெகுவாக பாதிக்கப் படுகின்றன. இதனால் தான் பெரும்பாலான உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன என ஆய்வாளர்கள் கூறு கிறார்கள்.

உள்ளுறுப்பில் கொழுப்பு அதிகமாவதால் தான் டைப் 2 நீரிழிவு மற்றும் இதயநலக் கோளாறுகள் போன்ற பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றது எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளானர்.

குளிர் பானங்களை அன்றாடம் பருகுவதால் தான் இன்சுலின் குறைபாடு ஏற்படுகிறது. மேலும் இதனால் தான் நடுவயதிலேயே பலருக்கு நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது எனவும் அமெரிக்க தேசிய உடல்நல நிறுவனம் அறிவித்துள்ளது.

சோடா பானங்களை பருகுவதால் நடுவயது மக்கள் தான் பெருமளவு பாதிக்கப் படுகிறார்கள். இதில் சேர்க்கப்படும் செயற்கை இனிப்பூட்டிகள் தான் இதற்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது.