மெர்சல் படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை!

ஒக்டோபர் 13, 2017

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மெர்சல்’ படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. இதில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யாமேனன் உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் வடிவேலு, கோவை சரளா, எஸ்.ஜே.சூர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த படம் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. மெர்சல் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மெர்சல் திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடைகோரி மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரித்த நீதிபதிகள் ‘மெர்சல்’ திரைப்படத்தை இணைய தளங்களில் வெளியிட தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும் இணையதள சேவை வழங்கும் பல நிறுவனங்களுக்கும் தடைவிதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மெர்சல் திரைப்படம் 3,292-க்கும் அதிகமான திரையரங்குகளில் வரும் 18-ம் திகதி வெளியாக உள்ளது.

செய்திகள்
வெள்ளி நவம்பர் 10, 2017

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சியும், போராட்டமுமே 'அறம்'.

திங்கள் நவம்பர் 06, 2017

கனடியத் தமிழ்ப் பெண் "ஜெசிக்கா ஜூட்" இன் எழுச்சிக் குரலில், கவிஞர் காசி ஆனந்தனின் கவிதை வரிகளில்