மே 18: சிற்பச்சாரியாரிடம் கடும் விசாரணை!

May 19, 2017

முள்ளிவாய்க்கால் கிழக்கு சின்னப்பர் தேவாலயத்தில் போரில் இறந்த 500 பொது மக்கள் நினைவாக நினைவுக்கற்களை பதிக்க ஏற்பாடு செய்த சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை எழில்ராஜன் மீது மூன்று மணிநேர கடும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா உதவி பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்திற்கு இன்று வருகைத்தருமாறு அருட்தந்தை எழில்ராஜனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொலிஸார் நினைவுப் படிமங்கள் யாருடையவை, அவர்கள் எவ்வாறு இறந்தார்கள், அதில் விடுதலைப்புலிகளின் பெயர்கள் இருந்தனவா என்ற கோணத்தில் மூன்று மணிநேரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனைத் தொடர்ந்து அந்த நினைவுப் படிமங்களை செய்த சிற்பச்சாரியாரையும் அழைத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த 17ஆம் திகதி இரவு 8 மணிக்கு முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட அருட்தந்தை எழில்ராஜன் விசாரணையின் பின் இரவு விடுவிக்கப்பட்டமையும், படிமக்கற்களை நடுவதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் ஊடாக பொலிசார் தடை உத்தரவைப் பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இணைப்பு: 
செய்திகள்
திங்கள் May 21, 2018

அன்றாட பொருண்மியத்தினை மேம்படுத்தும் நோக்கோடு 12 குடும்பங்களுக்கு வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் அவர்களால் கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன.

இது தொடர்பில் மேலும் அறியவருகையில்,