மைத்திரி,ரணிலுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு கடும் நடவடிக்கை!

நவம்பர் 14, 2017

 ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எதிராக செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு எதிராக சமரசமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர எச்சரித்துள்ளார். குருநாகல் மல்லவப்பிட்டியவில் கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கிராமிய சூழ்நிலையில் இருந்து வந்தவர். நல்ல மனம் கொண்டவர். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறந்த அறிவாளி.சர்வதேச அளவில் செல்வாக்கு மிக்கவர். இந்த இருவரின் கூட்டணியை மீறி எவராலும் எதையும் செய்ய முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் வெளிநாடுகளின் பணத்துக்காக ஒருசில அரச சார்பற்ற நிறுவனங்கள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தொடர்பில் வெளிநாடுகளில் போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்காக அவர்களின் வெளிநாட்டு வங்கிக் கணக்குகளில் பெருந்தொகைப் பணம் வைப்பிலிடப்பட்டு வருகின்றது. அவ்வாறான நபர்கள் தொடர்பில் கடுமையான அவதானத்துடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

பணத்துக்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் மீது எதுவித சமரசமும் இன்றி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர கடுமையாக எச்சரித்துள்ளார்.

செய்திகள்
செவ்வாய் செப்டம்பர் 25, 2018

 ஈழத்தீவில் வெளி­யேறிய   62 ஆயி­ரத்து 338 பேருக்கு வெளி­நாட்டுப் பயணத் தடை