மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை வடமாகாணசபை புறக்கணிக்கும் – சி.வி.கே!

ஒக்டோபர் 13, 2017

நாளை(14)  யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ் தின போட்டியில் சிறிலங்கா ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை வடமாகாணசபை புறக்கணிக்கவுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக சிறிலங்கா ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமலிருப்பதையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்புறக்கணிக்கவேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இரா. சம்பந்தனும் குறித்த நிகழ்வை புறக்கணிக்கவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்நிகழ்வைப் புறக்கணிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

செய்திகள்