மோதர பகுதியில் இளைஞர் கொலை!

Tuesday March 13, 2018

கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கி இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று (12) இரவு மோதர பகுதியில் உள்ள 'மெத்சந்த' என்ற தொடர்மாடி கட்டிடத்திற்கு முன்னால், முச்சக்கரவண்டியில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் மீதே, தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் கொட்டாஞ்சேனைப் பகுதியை சேர்ந்த, 25 வயதான வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொலை செய்த நபர்களும் கண்டறியப்பட்டுள்ளதாக காவல் துறையினர்  தெரிவித்துள்ளனர்.