யாழில் இரு இளைஞர்கள் மீது கத்தி குத்து!

திங்கள் ஏப்ரல் 16, 2018

யாழ்ப்பாணம் - நெல்லியடி பிரதேசத்தில் இரண்டு இளைஞர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இலக்க தகடுகள் அற்ற உந்துருளியில் வருகைத் தந்த இருவர் நேற்று (15) இந்த தாக்குதலை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பேரும் மந்துவில் பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்பதோடு, அவர்கள் தற்போது யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறன்றனர்.

 தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் இதுவரை இனங்காணப்படவில்லை என தெரிவித்துள்ள காவல்துறையினர், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக  குறிப்பிட்டுள்ளனர்.