யாழில் கடையுடைத்துக் கொள்ளை!

Tuesday September 25, 2018

யாழ்ப்பாணம் நகரின் மத்தியில் உள்ள விற்பனை நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு 11 இலட்சம் ரூபா பணம் திருடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், சத்திரச் சந்திக்கு அண்மையில் உள்ள விற்பனை நிலையத்தை இரவு பூட்டிவிட்டுச் சென்றனர் என்றும் மறுநாள் விற்பனை நிலையத்தைத் திறந்தபோது மேற்கூரை சீற் கழற்றப்பட்டு உள்நுழைந்து பணம் திருடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

கடையில் பாதுகாப்புக் கமரா பொருத்தப்பட்டிருந்தபோதும் அதன் சேமிப்பகத்தையும் கொள்ளையர்கள் அபகரித்துச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக யாழ்ப்பாணம் காவல் துறையிடம் முறையிடப்பட்டுள்ள நிலையில் . காவல் துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.