யாழில் காவல் துறை வாகனப் பேரணி!

Saturday August 11, 2018

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு  மக்களின் உதவியை நாடி காவல் துறை  வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண  காவல் துறை  உயர் அதிகாரிகள்  மற்றும் காவல் துறை  இணைந்து வாகனங்களில் பேரணியாகச் சென்று விழிப்புணர்வுத் துண்டு அறிக்கைகளையும் விநியோகித்து வருகின்றனர்.