யாழில் நள்ளிரவில் இளம் பெண்கள் மீது வாள்வெட்டு!

March 23, 2018

யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் மூன்று பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாயன்மார்கட்டு பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் நின்றிருந்த மூன்று பெண்கள் மீது நேற்றிரவு வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோவில் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்த பெண்கள் மீது 28 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.தலைப்பகுதியில் படுகாயமடைந்த மூன்று பெண்களும் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தாக்குதலை மேற்கொண்டவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இச்சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

செய்திகள்
சனி யூலை 21, 2018

சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிரிவினையை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச சக்திகள் செயற்பட்டு வருகின்றன.