யாழில் பெயர் பலகை இல்லாது உணவகம் திறந்துவைப்பு!

செப்டம்பர் 21, 2017

வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வடமாகாண விவசாய அமைச்சினால் திறந்துவைக்கப்பட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள அம்மாச்சி உணவகம் நேற்று முன்தினம் பெயர்ப்பலகையின்றி யாழ்ப்பாணத்தில் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம், வடமாகாண விவசாய அமைச்சினால் திருநெல்வேலி விவசாயக் கல்லூரியில் விவசாயக் கண்காட்சி நடைபெற்றது. இவ்விவசாயக் கல்லூரிக்கு எதிர்ப்பக்கத்தில் குறித்த உணவகம் திறந்துவைக்கப்பட்டுள்ளதுடன், கண்காட்சிக்குச் சென்றவர்களுக்கு உணவும் வழங்கப்பட்டது.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அம்மாச்சி உணவகம் அமைப்பதற்கு அதன் பெயரை சிங்களத்தில் போடவேண்டும் என மத்திய அரசாங்கம் அழுத்தம் கொடுத்ததாக வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே, குறித்த உணவகம் பெயர்ப்பலகையின்றியும் எந்தவித ஆரவாரமின்றியும் திறந்துவைக்கப்பட்டிருக்கலாம் எனவும்தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், தற்போது விவசாய அமைச்சராக இருக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கண்காட்சிக்கோ , அம்மாச்சி உணவகத் திறப்பு விழாவுக்கோ வருகை தரவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.

செய்திகள்