யாழ்.நகரில் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Tuesday February 23, 2016

யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் யாழ்.நகரப் பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றமை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.   

யுhழ். நகரப் பகுதியில் கற்பூரம், ஊதுபத்தி விற்பனை, பண்ணை மீன் சந்தையில் மீன் விற்பனை மற்றும் தேன் விற்பனை உட்பட பல வேலைகளில் சிறுவர், தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.  

சிறுவர்களை வேலைக்கமர்த்தவேண்டாம் என்று வர்த்தகர்களுக்கு கூறியபோதிலும் அவர்கள் இதைக் காதில் வாங்காமல் அவர்களை வேலைக்கு இணைத்துக்கொள்வதாகவும் தெரியவருகின்றது. 

பாடசாலைக்கு செல்லாத சிறுவர்களை மீண்டும் பாடசாலையில் இணைக்கும் நடவடிக்கையில் மாவட்ட செயலக சிறுவர் அதிகார சபை மற்றும் நன்னடத்தை அதிகாரிகள் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் சிறுவர் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறையவில்லை. 

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்களில் நகரப் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் பணிபுரியும் சிறுவர்களே அதிகம் பாதிக்கப்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.