யாழ்.நகரில் விசேட அதிரடிப் படையினர் குவிப்பு, பவள் கவச வாகனங்களில் படையினர் ரோந்து

ஒக்டோபர் 13, 2017

நிராயுதபாணிகளாக, ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களை ஆயுதங்கள் சகிதம் விசேட அதிரடிப் படையினர் அச்சுறுத்தி வருகின்றனர். 

தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக இன்று ஹர்த்தால் மற்றும் ஆர்பாட்டங்களை நடத்திவரும் நிலையில், யாழ்.நகரில் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

பவள் கவச வாகனங்களில் யாழ்.குநாட்டு வீதிகளில் திரியும் படையினரும்  மக்களை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். 

வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், மோட்டார் சைக்கிள்களில் விசேட அதிரடிப் படையினர் ஆயுதங்கள் சகிதம் களமிறக்கப்பட்டுள்ளனர். 

அவர்கள் அங்கும் இங்கும் சுற்றிச் சுழன்றடித்து மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு உள்ளேயும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். 

எனினும், எந்தவிதமான அச்சுறுத்தல்களையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இணைப்பு: 
செய்திகள்