யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை

வெள்ளி டிசம்பர் 04, 2015

யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக  காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன், அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் தெரிய வந்துள்ளது. 

யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.