யாழ்ப்பாணத்தை திரும்பி பார்க்க வைத்த மேதினம். [படங்கள்]

May 02, 2017

இலங்கை ஆசிரியர் சங்கம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம், கிராமிய உழைப்பாளர் சங்கம், அரசாங்க செயற்பாட்டுக் குழு, தமிழ் மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையம், சமூக விஞ்ஞான ஆய்வு மன்றம் ஆகிய ஆறு அமைப்புக்கள் ஒன்றிணைந்து நேற்றைய தினம் மேதின நிகழ்வை நடாத்தியுள்ளது.

காலை 09.30 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகிய பேரணி கந்தர்மடம் ஆத்தி சூடி வீதி, பலாலி வீதியூடாகப் மீண்டும் பல்கலைக்கழக முன்றலைப் பேரணி சென்றடைந்தது. அதன் பின்னர் பல்கலைக்கழக முன்றலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.தங்கராஜா தலைமையில் மேதினக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் தலைவர்களின் உரைகள் இடம்பெற்றன.

இணைப்பு: 
செய்திகள்