யாழ் பல்கலைக்கழக அறிவியல்நகர் வளாக விடுதிக்கு சிங்களப் பெயர்!

Saturday May 19, 2018

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள பொறியியல் மற்றும் விவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அழகுபார்த்துள்ளது.

குறித்த விடுதியில் தமிழ் சிங்கள முஸ்லீம் மாணவர்கள் கல்விகற்றுவருகின்றனர். குறித்த விடுதியின் பெயர்ப்பலகை பல்கலைக்கழக மாணவர் விடுதி என்று தமிழிலோ ஆங்கிலத்திலோ அன்றில் சிங்களத்தில் கூட எழுதப்படாமல் சிங்களப் பெயர் ஒன்றின் ஆங்கில உச்சரிப்புக்களை Sarasavi Medura  (සරසවි මැදුර) பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார்கள்

Sarasavi Medura   (සරසවි මැදුර) என்பதன் மொழிபெயர்ப்பு அர்த்தம் பல்கலைக்கழக வளாகம்  (University Palace) என கொண்டிருந்தபோதிலும் அதன் சிங்களப் பெயரின் உச்சரிப்பை மட்டும் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய அவசியம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.