யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸார் இலஞ்ச மழையில் குளிக்கின்றனர், இதனாலேயே குற்றங்கள் அதிகரிப்பு

வெள்ளி ஓகஸ்ட் 10, 2018

யாழ். மாவட்டத்தில் உள்ள பொலிஸார் இலஞ்சம் பெற்றுக்கொண்டு குற்றவாளிகளைத் தப்பிக்க விடுகின்றனர் எனவும் இதனாலேயே குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன எனவும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.குகதாஸ் தெரிவித்துள்ளார். 

சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு விடுவிக்கப்படுகின்ற நபர்கள், யாழ்ப்பாணத்தில் இருந்து பொலிசார் விடுமுறையில் செல்லும் போது அவர்களுக்கு கருவாடு, இறால், கணவாய், மாம்பழம், ஒடியல், வாழைப்பழம் என்பவற்றைக் கொடுக்கின்றனர் எனவும் குகதாஸ் தெரிவித்தார். 

வடக்கில் யாழ் மாவட்டத்தில் அண்மைக்காலங்களில் வன்முறைகள் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்தமைக்கு உண்மையான காரணம் பொலிசாரின் இலஞ்சம் இதனால் குற்றச் செயல் புரிகின்றவர்கள் துணிச்சலாக நடமாடுகின்றனர். பாதுகாப்பாக குற்றச் செயல்களை மேற்கொள்கின்றனர்.

தற்போது மரக்கடத்தல் மணல்கடத்தல் கஞ்சாகடத்தல் ஆடு. மாடு கடத்தல். கள்ளச்சாராயம் வடித்தல் அனுமதிப்பத்திரம் இல்லாது வாகனம் செலுத்துதல், சட்டவிரோத வியாபாரங்கள் செய்தல் போன்ற பல சமூக விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வோர் சுதந்திரமாக செயற்படுகின்றனர். 

தவிர்க்க முடியாத சூழ்நிலையில் அவர்கள் பிடிக்கப்படும் போது பின்னர் வெளிவருகின்றனர். காரணம் பொலிசாரின் ஆதரவும் கையூட்டும் தான் இதனை மக்களே கூறி ஆதங்கப்படுகின்றனர்.

யாழ். மாவட்டத்திற்கு இடமாற்றமாகி வருவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் முண்டி அடிப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன. இதே பொலிசார் 2009 இற்கு முன்பு யாழ்ப்பாணம் வருவதற்கு பயத்தில் ஒழிந்தவர்கள். இன்று யாப்பாணத்தில் இருந்து இடமாற்றம் வந்தவுடன் மீண்டும் இங்கு பணிபுரிய வேண்டும் என பிடிவாதம் பிடிக்கின்றனராம்.
 
காரணம் இங்கு இலஞ்சம் அதிகமாக கிடைக்கிறதாம். யாழ்ப்பாண சமூக விரோதிகள் இலஞ்சம் கொடுத்து தப்புவதற்கு முண்டியடிக்கின்றனர். 

யாழ்ப்பாணத்தில் இருந்து பொலிசார் விடுமுறையில் செல்லும் போது அவர்களுக்கு கருவாடு, இறால், கணவாய், மாம்பழம், ஒடியல், வாழைப்பழம் என பாசல்கள் கொடுப்பதற்கு சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொள்வோர் தீவிரமாக உள்ளார்களாம்.