யுத்தத்தால் பாதிப்படைந்தவர்களுக்கு இழப்பீடுகள்!

வியாழன் செப்டம்பர் 13, 2018

யுத்தத்தால் பாதிப்படைந்தவர்கள் 91 பேருக்கு  இழப்பீடு வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது.  கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக வவுனியா மாவட்டத்தில் பாதிப்படைந்த 2 மதத்தளங்களுக்கான இழப்பீடாக 5 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாயும், மரணம் மற்றும் காயமடைந்தமைக்காக 8 பேருக்கு 2 இலட்சத்து 92 ஆயிரத்து 465 ரூபாயும், மக்களுடைய உடமைகள் மற்றும் சொத்தழிவுகளுக்காக 81 பேருக்கு 25 இலட்சத்து 24 ஆயிரத்து 323 ரூபாயும்  ஆக 91 பேருக்கு 33 இலட்சத்து 94 ஆயிரத்து 788 ரூபாய்  இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகள் வழங்கப்பட்டது. 

வவுனியா மாவட்ட அரச அதிபர் எம்.ஐ.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதி அமைச்சர் கே.கே.மஸ்தான், அவரது செயலாளர், அரச அதிகாரிகள், பாதிக்கப்பட்ட மக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.