யுனெஸ்கோவில் இருந்து வெளியேறுவோம்: அமெரிக்கா - இஸ்ரேல்

ஒக்டோபர் 13, 2017

யுனெஸ்கோவில் இருந்து வெளியேறப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அதைத் தொடர்ந்து இஸ்ரேலும் வெளியேற உள்ளாக கூறியுள்ளது. ஐ.நா.வின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ, இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து கூறி வந்தது. யுனெஸ்கோ செயல்பாடுகளில் இருந்து விலகியே இருந்தது. இதனால் அமெரிக்கா எந்த நேரத்திலும் யுனெஸ்கோவில் இருந்து விலகலாம் என்று தகவல் வெளியானது. 

இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகப்போவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விலகல் டிசம்பர் 2018 இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும், அதுவரை யுனெஸ்கோவில் அமெரிக்கா முழு உறுப்பினராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, யுனெஸ்கோ பாலஸ்தீனத்தை உறுப்பினராக சேர்த்துக்கொண்டதை அடுத்து அமெரிக்கா, யுனெஸ்கோவுக்கு வழங்கிவந்த நிதியைக் குறைத்தது. எனினும் அமெரிக்கா செலுத்தவேண்டிய பங்களிப்பு நிலுவை கூடிக்கொண்டே வந்தது. யுனெஸ்கோவில் இருந்து விலகுவதற்கு இதையும் ஒரு காரணமாக அமெரிக்கா கூறியுள்ளது.

யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததையடுத்து இஸ்ரேலும் விலகப் போவதாக அறிவித்தது. அமெரிக்காவின் இந்த முடிவை துணிச்சலான, அறம் சார்ந்த முடிவு என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். 

அமெரிக்கா விலகும்போது அந்த சமயத்தில் இஸ்ரேலும் விலகுவதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி வெளியுறவுத்துறைக்கு அறிவுறுத்தியிருப்பதாக பெஞ்சமின் நேதன்யாகு டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் இந்த முடிவு குறித்து யுனெஸ்கோ கவலை தெரிவித்துள்ளது. பன்முகத் தன்மை மற்றும் ஐ.நா. குடும்பத்திற்கு இழப்பு என்றும் யுனெஸ்கோ கூறியுள்ளது.

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 22, 2017

குர்திஸ்தானின் கேர்க்குக், ரஸ் குர்மாற்றூ ஆகிய நகரங்களில் ஈராக்கிய-ஈரானிய படைகளால் 550 தொடக்கம் 600 வரையான குர்தி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தானில் கடந்த ஆறு நாட்களாக ஈரானிய-ஈராக்கிய படைகள் முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகளில் 168,372 குர்தி மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக குர்திஸ்தான் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனி ஒக்டோபர் 21, 2017

மர்ம நபரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.