யூனிசெப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக இந்திய வம்சாவளி பெண்

யூலை 15, 2017

யூனிசெப் அமைப்பின் சர்வதேச நல்லெண்ண தூதராக கனடாவை சேர்ந்த இந்திய வம்சாவளி பெண்ணான ‘சூப்பர் விமன்’ லில்லி சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா நாட்டில் வசித்துவரும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் லில்லி சிங். இவர் நடிப்பு, காமெடி, எழுத்தாளர் என பன்முக திறமை கொண்டவர். யூடியூபில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல காணொளிகளை  பதிவிடும் இவர் ‘சூப்பர் விமன்’ என்னும் புனைப்பெயருடன் அழைக்கப்படுகிறார். இவரது யூடியூப் பக்கத்தை சுமார் 11.9 மில்லியன் மக்கள் பின் தொடர்கின்றனர்.

தற்போது இந்தியாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்திவரும் அவர் அளித்த பேட்டியில், “என்னை சர்வதேச நல்லெண்ண தூதராக யூனிசெப் அமைப்பு அறிவித்துள்ளது. யூனிசெப்பின் நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்திற்காக குரல் கொடுப்பேன்” என்றார்.

அவர் இதுவரை வெளியிட்டுள்ள காணொளிகளை இந்திய பெண்கள் புரிந்து கொள்வதற்காக ஹிந்தியில் மொழிபெயர்க்க உள்ளதாகவும் அவர் கூறினார்.

செய்திகள்